களியக்காவிளை அருகே பரம்பரை பரம்பரையாக, ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணிக்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்டம், மேக்கோடு பகுதியில் உள்ள பனச்சக்குழி பத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை பூக்களால் அலங்காரம் செய்து மேள தாளங்களுடன் களியக்காவிளை சந்திப்பு வரை ஊர்வலமாக அழைத்து சென்று வழியனுப்பு விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டு அலங்கார வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அலைக்கழித்ததாகவும் கூறியுள்ளனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும் போலீசார், அலங்கார வாகன ஊர்வலத்திற்கு உள்நோக்கத்துடன் தடைவிதித்துள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















