ஆரோவில் செயலாளருடன் பிரிட்டிஷ் துணைத் தூதர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஆரோவில் பவுண்டேஷனுக்கு வருகை தந்த புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் ஹலிமா ஹாலந்து, ஆரோவில் பவுண்டேஷன் செயலாளரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி உடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இதில், ஆரோவில் பவுண்டேஷனுடன் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருவரும் விவாதித்தனர். இளைஞர் மற்றும் கல்விப் பரிமாற்றம், ஸ்டார்ட்அப் மற்றும் நிலைத்தன்மை மாநாடு, மனித ஒற்றுமைக்கான ஆராய்ச்சி கூடம், தொழிற்கல்வி மற்றும் கலாச்சாரக் கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், ஆரோவில்லின் அதிகாரப்பூர்வ மாஸ்டர் பிளானை ஹாலந்திடம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
















