இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி செல்போன் மூலம் உரையாடியுள்ளார்.
இதுபற்றி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, தமது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் உரையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நடப்பாண்டில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வழிகள் குறித்து கலந்தாலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















