நீலகிரி மாவட்டத்தில் படுகர் பண்டிகையான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
கோத்தகிரி அருகே பேரகணி பகுதியில் அமைந்துள்ள ஹெத்தையம்மன் கோயிலில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக கோத்தகிரி வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து பேரகணி சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், படுகர்களுடன் சேர்ந்து ஹெத்தையம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தார்.
















