சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கான நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரிய தர்கா நிர்வாகத்தின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, சந்தனக்கூடு திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும் எனவும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், சந்தனக்கூடு திருவிழாவுக்கான நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி தர்கா நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தர்கா நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















