பதவி நீக்க மசோதா வரம்புக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுவர முடியுமா? என சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர், முதலமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள் தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி, ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெற முடியாவிட்டால், அவா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னா், விரிவான ஆய்வுக்காக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.
இந்நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை இந்த மசோதா வரம்புக்குள் கொண்டுவர முடியுமா என நாடாளுமன்ற கூட்டுக்குழு சட்ட ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சட்ட நிபுணர்கள் தங்களின் கருத்துகளை எழுத்து பூா்வமாக வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது..
















