தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் பள்ளியில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.
ஆலங்குளத்தில், தமிழர் பாரம்பரிய முறைப்படி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மாட்டு வண்டி பயணம் போன்ற கிராமிய நிகழ்ச்சியோடு களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கலானது, தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகள் மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினர். இந்த பொங்கல் நிகழ்ச்சியின் போது பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் நாதஸ்வரம், தவில் இசையோடு பொங்கல் விழா, திருவிழா போன்று களை கட்டியது.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நட்த்தப்பட்டது. போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
















