தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் 75வது குடியரசு தின கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும்,
அதனைச் செயல்படுத்த விடாமல் தடுப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயன்றதும், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததும் இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று என்று கூறிய ஆளுநர், இது அரசியலமைப்பைச் சிதைக்கும் திட்டமிட்ட முயற்சி எனவும் சாடினார்.
















