விருதுநகரில் பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தைத்திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா, பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கான உறியடி போட்டி நடைபெற்றது.
















