தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தவெக பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள் என பல்வேறு நபர்களிடம் கடந்த 3 மாதங்களாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மத்திய தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் என 10-க்கும் மேற்பட்டோர் தீவிர விசாரணை நடத்தினர்.
















