பெரிய வழிப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 31 தேதி திறக்கப்பட்டது. பக்தர்கள் பம்பை வழியாகவும், புல்மேடு வழியாகவும் எரிமேலியில் இருந்து பெரிய வழி பாதை வழியாக தினம் தோறும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பெரிய வழி பாதை வழியாக எருமேலியில் இருந்து சென்று கொண்டிருந்த பக்தர்களை அழுதா நதிக்கரையில் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நாளை தரிசனம் செய்ய பதிவு செய்த பக்தர்களை தான் இன்று அனுமதிக்கிறோம் என்றும், 11-ம் தேதி தரிசிப்பவர்களை நாளை தான் அனுமதிக்க முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















