சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, பராசக்தி படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
















