மதுரை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் வைத்து வழிபட்ட அவர்கள், வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் உற்சாகமுடன் கலந்துகொண்டனர்.மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
















