சேலம் மாவட்டம் முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குழந்தை பாடகி தியா, முருகப்பெருமானின் பாடல்களை பாடி அசத்தினார்.
வாழப்பாடி அருகே உள்ள முத்துமுலை கோயிலில், குழந்தை பாடகி தியா, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில், முருகப்பெருமானின் “கந்தன் கருணை” பாடலை பாடினார். இதனை அங்கிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.
















