ஈரான் மக்கள் மீதான வன்முறை தொடர்ந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த 12 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் மக்கள் மீதான வன்முறை தொடர்ந்தால், அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரான் பெரும் சிக்கலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை போல மக்கள் மீதான தாக்குதலை அரசு தொடர்ந்தால், பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மக்களை மோசமாக நடத்தியதற்கான பலனை ஈரான் அரசு அனுபவித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
















