நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது
அதன்பேரில் நடிகர் விஜய்-ன் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறையினர் புலி படத்தில் நடித்ததற்காக 15 கோடி ரூபாய் பணம் பெற்றிருந்ததும், அதனை கணக்கு தாக்கலின்போது அவர் மறைத்துள்ளதையும் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது ஆஜரான வருமானவரித்துறை தரப்பு வழக்கறிஞர் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை எனவும், தீர்ப்பாயத்தை விஜய் நாடிய பின்னரே இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி நடிகர் விஜய் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
















