தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 பேரை நியமனம் செய்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் 10 உறுப்பினர்களும் இஸ்லாமியர்கள் எனவும் மாற்று மதத்தினர் அதில் இடம்பெறவில்லை என வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வக்பு வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்ததோடு, தமிழக அரசு பதிலளிக்க ஆணையிட்டது.
















