தமிழகம் – மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து மேற்குவங்கத்தின் சந்திரகாச்சி வரையிலும், ஜல்பாய்குரி ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரையிலும், அதே போல நாகர்கோவிலில் இருந்து ஜல்பாய்குரி வரையிலும் புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல அசாம் – மேற்கு வங்கம் இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ரயில்களின் சேவையை வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
















