ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’ படம், ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
வரும் மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் ‘காந்தாரா சாப்டர் 1’ இடம்பெற்றுள்ளது. சிறந்த திரைப்படப் பிரிவு மட்டுமின்றி, சிறந்த நடிகர் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் இந்தப் படம் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது.
இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே டூரிஸ்ட் ஃபேமிலி, மகா அவதார் நரசிம்மா உள்ளிட்ட இந்திய படங்களும் ஆஸ்கர் விருது போட்டியில் களத்தில் உள்ளன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
















