சரக்கு மற்றும் போக்குவரத்திற்காக குழுமம் அமைக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து திட்டங்களை முறைப்படுத்துவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியம், அந்த வகையில் மாநில அளவில் ஒருங்கிணைந்த குழுமங்களை அமைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
இதில் பெரிதாக ஆர்வம் காட்டாத தமிழக அரசு, குழுமம் அமைக்கும் நடவடிக்கையில் தொய்வு நிலையிலேயே காணப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, இருப்பினும் குழுமம் அமைப்பதில் தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது,அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
















