காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக தனி நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 312 சவரன் நகைகள் மாயமான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டதில் ஒரு துளி தங்கம் கூட சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட வில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாயமான நகைகளை கண்டறிய தனிநீதிபதியின் விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.
















