திமுகவை வீழ்த்தி சனாதன விரோத சக்திகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்,
கோவை மாவட்டம் முதலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை பெருங்கோட்ட பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நபின், சனாதனத்தை எதிர்த்த சக்திகளைத் தோற்கடிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது என்றும், சனாதனத்தையும் ராமரையும் இழிவாகப் பேசியவர்களுக்குப் பாடம் புகட்ட அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்து விரோத சக்திகளை முறியடித்து, பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
















