அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அசைவ உணவு விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புனித யாத்திரை செல்லும் பாதையில் உள்ள பகுதிகளில் ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் அசைவ உணவுகளை விற்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நகரத்தின் புனிதம் மற்றும் மத உணர்வுகளைப் பாதுகாப்பதே தடையின் நோக்கம் எனவும் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது…
















