உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேச நாட்டினரின் சிறைத்தண்டனை முடிவடைந்ததை அடுத்து நாடு கடத்தப்பட்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஆக்ராவின் சிக்கந்திரா பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 38 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி வங்கதேச எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
















