அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயன்ற பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் பெண் உள்பட 3 பேர் டி1 வாயில் வழியாக நுழைந்தனர்.
அதில் இளைஞர் ஒருவர் கோயில் சமையலறைக்கு அருகில் அமர்ந்து தொழுகை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், மூவரையும் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் காஷ்மீரி உடையை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















