சென்னை ஆவடியில் CRPF வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவை ஒட்டி நடைபெற்ற, கண்கவர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
CRPF பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டன இதில் துப்பாக்கி சுடுதல், நீச்சல், பாதைகளை கண்டறிதல், மனத்திடம், வெடிகுண்டுகளை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அப்போது வீரர்கள் கண்கவர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதனை வீரர்களின் குடும்பத்தினர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
















