சமூகத்தில் எந்த வகையான பாகுபாடுகளும் இருக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்,
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது, இந்து சமூகத்தின் ஒற்றுமை மற்றும் சாதிப் பாகுபாடுகளைக் களைவது குறித்து முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, இந்த உலகம் நம்மிடையே மொழி, சாதி, பிரிவு மற்றும் சமூகம் என பல பிளவுகளை காண்பதாக குறிப்பிட்ட அவர், நாம் வாழும் சமூகத்தை தாம் ஒன்றாகவே கருதுவதாகவும், முழு இந்து சமூகமும் ஒன்று என தாம் நம்புவதாகவும் கூறினார்.
மேலும், இன்ப துன்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய மோகன் பாகவத், அனைவரையும் நண்பர்களாகக் கருதி நடத்தும் பண்பு நமக்குள் வளர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
















