வரத்து குறைந்ததால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் மல்லிப் பூ கிலோ 8 ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டிபட்டி, கண்ணியபிள்ளைபட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக செடிகளிலேயே பூக்கள் கருகுவதால், வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக அண்மையில் கிலோ 2 ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிப் பூ, தற்போது 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பிச்சி பூ ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரை ஏலம் போனது.
















