மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பயணிகள் வரிசையில் நின்று ரயிலில் ஏறும் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலிலிருந்து கீழே விழுந்து ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த மத்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மும்பை பத்லாபூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வரிசையில் நின்று ரயிலில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது.
பயணிகள் ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளில் ஈடுபடாமல், அமைதியாக வரிசையில் நிற்பதை கண்ட நெட்டிசன்கள், இது கனவா? அல்லது நனவா? எனக் கூறி தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிலரோ இந்த வீடியோவை நம்ப மறுத்ததுடன், ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்
















