கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
அஞ்சுகிராமம் அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சபாநாயகர் அப்பாவு, காங் எம்.பி விஜய் வசந்த், நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பங்கேற்ற திரளான மக்கள், மூன்றாயிரத்து ஆறு பானைகளில் பொங்கலிட்டு சூரிய பகவானை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நடிகை தேவயானி, மக்களின் கோரிக்கையை ஏற்று பாடல் பாடி அசத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
















