சென்னை புத்தகக் காட்சியில் உள்ள விஜயபாரதம் அரங்கில் தினந்தோறும் நூல் ஆசிரியர்களுடன் உரையாடல் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் F54 வது அரங்கில் விஜய பாரத பிரசுரம் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம் சார்ந்த மற்றும் பல்வேறு புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கே ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு நூல் ஆசிரியர்களுடன் உரையாடல் என்கின்ற தலைப்பில் தினமும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
















