வெனிசுலாவிடம் இருந்து கியூபாவுக்கு இனி எண்ணெயோ, பணமோ கிடைக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் அரசியல் மாற்றங்களில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு வரும் சூழலில், கியூபாவுக்கு டிரம்ப் பகிரங்கமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், கடந்த பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகாரிகளுக்கு கியூபா வழங்கி வந்த பாதுகாப்பு சேவைகள் இனி தொடராது என்றும், வெனிசுலாவுக்கு இனி வெளிநாட்டு ரவுடிகளிடமிருந்தோ அல்லது மிரட்டிப் பணம் பறிப்பவர்களிடமிருந்தோ பாதுகாப்புத் தேவைப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில், உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட அமெரிக்கா, இனி வெனிசுலாவைப் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், வெனிசுலாவிடம் இருந்து கியூபாவுக்கு இனி எண்ணெயோ, பணமோ கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
நிலைமை கைமீறிப் போவதற்கு முன்பு கியூபா ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
















