கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை அதிகாரிகள் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிபிஐ அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
















