நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு மசோதா கடந்த ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட நிலையில், மக்களின் கருத்துக்காக அதன் நகல் வெளியிடப்பட்டது.
தற்போதுள்ள விதைகள் சட்டம் கடைசியாக 1972-ல் திருத்தப்பட்டது. விவசாயிகளுக்கு மலிவு விலையில் உயர்தர விதைகள் கிடைப்பதை புதிய மசோதா உறுதி செய்கிறது. மசோதாவுக்கு ஆட்சேபனை எழுந்தால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















