திருப்பரங்குன்றம் மலை மற்றும் அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட H.ராஜா உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு
எச் ராஜாவை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்தை சாமி தரிசனம் செய்ய வேண்டுமென செல்ல முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் H.ராஜா, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட 12 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் நேற்று இரவு காவல்துறையால் கைது செய்யப்பட்ட H.ராஜாவை விடுவிக்க கோரி காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
















