தணிக்கை குழுவில் ஜனநாயகன் திரைப்படக் குழுவினர் முறையாக apply செய்யவில்லை என்றும், தணிக்கை குழுவிற்கு முன்னுரிமை தராமல் நீதிமன்றத்திற்கு சென்றது தவறு எனவும் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தணிக்கை குழுவில் ஒருவர் முறையிட்டால் மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்புவதுதான் நடைமுறை என தெரிவித்தார். பராசக்தி படவிவகாரத்தில் நிலவும் திமுக-காங்கிரஸ் கருத்து மோதல் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும், நீதிபதிக்கு எதிராக புத்தகம் எழுதுவது இழிவான அரசியல் எனவும் கனல் கண்ணன் கூறினார்.
















