பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி நிராகரித்தது.
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 50 சதவீத நிதியை கடனாக, குறைந்த வட்டியில் வழங்குமாறு, நபார்டு வங்கியிடம், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டுறவு துறை கோரியது. அதில், 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மேலும், 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனை குறைந்த வட்டியில் வழங்குமாறு நபார்டு வங்கியிடம், கூட்டுறவு துறை கேட்டது. இந்த கடனை வழங்க முடியாது என நபார்டு வங்கி நிராகரித்துள்ளது.
















