பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல் தாஸ் நினைவு அறக்கட்டளை இணைந்து 19-வது ஆண்டாக திருமண விழா நடைபெற்றது.
கராச்சியில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 76 இந்து ஜோடிகள் மலர் மாலையை மாற்றிக்கொண்டு தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களை இலவசமாக வழங்கினர்.
மேலும், பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 19 ஆண்டுகளில் இதுவரை 1,850 மணப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
















