வரும் நாட்களில் அடுத்தடுத்த திமுக மாநாடுகள் நடைபெற உள்ளதால், செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தஞ்சையில் வரும் 26ம் தேதி கனிமொழி எம்பி தலைமையில், மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதேபோல் திருப்பூரில் பிப்ரவரி 8ம் தேதி திமுக மாநாடு நடைபெற உள்ளது.
அதுமட்டுமின்றி மேற்கு, மத்திய, தெற்கு மண்டலங்களிலும் மாநாடுகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள். எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















