இந்திய மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு செமிகண்டக்டர் ஆலைகள், உற்பத்தியை தொடங்க உள்ள நிலையில், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி 6 கோடியே 76 லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும் அதன் ஏற்றுமதி 2 கோடியே 70 லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
















