தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் மாகோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
















