பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை… செழிக்கட்டும்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்…! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் திருநாளில், தேனாய், செங்கரும்பாய், திகட்டாது தித்தித்திட…நம் அனைவரின் வாழ்விலும் இன்பம் பொங்கி… மகிழ்ச்சி பெருக இறைவனை வேண்டுகிறேன்.
தை பிறந்து விட்டது விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வழி பிறக்க இறைவனை வேண்டி, இந்த பொங்கல் திருநாளில் இயற்கையை வணங்கி உழவர்களை கொண்டாடி இந்த தமிழர் திருநாளாம் தை திருநாளை நம் உறவுகளோடும் நண்பர்களோடும் சுற்றத்தார்களோடும் இணைந்து கொண்டாடுவோம்.
உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
















