தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் நமது ராணுவம் உறுதியுடன் நிற்கிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதுடன், பேரிடர்களில் மனிதாபிமான முறையில் முக்கிய உதவிகளை வழங்குகின்றனர் என கூறியுள்ளார்.
மேலும், ராணுவ வீரர்களின் அசைக்க முடியாத ‘நாடு முதன்மை’ என்ற உணர்வு ஒவ்வொரு இந்தியரையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
















