எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ராணுவ தினத்தை ஒட்டி ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், கடமையின் போது தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் எனவும் கூறியுள்ளார்.
இந்திய ராணுவம் அனைத்து வகையான போர்களுக்கும், அனைத்து வகையான தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனவும் உபேந்திர திவேதி குறிப்பிட்டுள்ளார்.
















