கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய இலட்சிணையை வெளியிட்டார்.
தொடர்ந்து மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 1970-ல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை ஏழைகளுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்டு வருவதாகப் புகழாரம் சூட்டினார்.
















