லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் கடத்தப்பட்ட பெண்ணை சீக்கியர்கள் போராடி மீட்டனர்.
மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியை பாகிஸ்தானை சேர்ந்தவர் காதலித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த வேறு சிலராலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள குடியிருப்பில் சிறுமி அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுவதாக அங்குள்ள சீக்கியர்களுக்கு தகவல்களுக்கு கிடைத்தது. இதனை அடுத்து அந்த குடியிருப்பை 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சூழ்ந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சிறுமி மீட்கப்பட்டார். இதனிடையே சிறுமியை கடத்தியவர்களை கைது செய்து லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















