கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான பெரியகோம்பை புதூர் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வரும் நிலையில், நடப்பாண்டு மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு 108 பொங்கல் வைத்து விமரிசையாக கொண்டாடினர்.
வீட்டு வாசலில் வரிசையாக பொங்கல் பானைகளை வைத்து கரும்பு, மஞ்சள் வர்ணத் தோரணைகளை கட்டி மலைவாழ் பெண்கள் பாரம்பரிய புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மேலும், மலைவாழ் மக்களின் பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டத்தையும், கொல்லிமலை கும்மி பாட்டை பாடியும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
















