எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் வசதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக் மூலம் பாலியல் படங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உலகளாவிய எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஏஐ கருவியான குரோக் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் வசதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நிஜ மனிதர்களின் புகைப்படங்களைத் தொகுத்து, அவர்களை ஆபாசமான ஆடைகளுடன் காட்டுவதற்கு குரோக் கணக்குகளை அனுமதிக்காத வகையில், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் தளம் தரப்பு தெரிவித்துள்ளது.
















