கோவை கொடிசியாவில் நடந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் SNR சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா, ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 25வது ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இலச்சினை வெளியிட்டார்.
மேலும், சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
அப்போது, குடியரசு துணை தலைவர் அறிவுறுத்தியதின்பேரில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்த சம்பவம், அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
















