மாட்டு பொங்கலையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உணவாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, இரண்டாயிரம் கிலோ இனிப்புகள், பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















